கோச்சார கிரக நிலை (ராசி கட்டம்)
ராகு கால எமகண்ட குளிகாதி காலங்கள்
கீழ்கண்ட அனைத்து நேரங்களும் சூரிய உதயம் 6:00 மணிக்கு கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய உதய, அஸ்தமன நேரத்தின்படி மேலே காண (ஊர்களை) தேர்ந்தெடுத்துப் பார்க்கவும்.
| கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
|---|---|---|---|
| ஞாயிறு | 4:30–6:00 | 12:00–1:30 | 3:00–4:30 |
| திங்கள் | 7:30–9:00 | 10:30–12:00 | 1:30–3:00 |
| செவ்வாய் | 3:00–4:30 | 9:00–10:30 | 12:00–1:30 |
| புதன் | 12:00–1:30 | 7:30–9:00 | 10:30–12:00 |
| வியாழன் | 1:30–3:00 | 6:00–7:30 | 9:00–10:30 |
| வெள்ளி | 10:30–12:00 | 3:00–4:30 | 7:30–9:00 |
| சனி | 9:00–10:30 | 1:30–3:00 | 6:00–7:30 |
| கிழமை | அர்த்த | காலன் | இரவு எமகண்டம் |
|---|---|---|---|
| ஞாயிறு | 10:30–12:00 | 6:00–7:30 | 6:00–7:30 |
| திங்கள் | 9:00–10:30 | 3:00–4:30 | 3:00–4:30 |
| செவ்வாய் | 7:30–9:00 | 1:30–3:00 | 1:30–3:00 |
| புதன் | 6:00–7:30 | 12:00–1:30 | 12:00–1:30 |
| வியாழன் | 3:00–4:30 | 10:30–12:00 | 10:30–12:00 |
| வெள்ளி | 1:30–3:00 | 9:00–10:30 | 9:00–10:30 |
| சனி | 12:00–1:30 | 7:30–9:00 | 7:30–9:00 |
“அபிஜித ஆகமாந்துதீரஅபிஜிதாம்பர நட்சத்ராணாம்நாததீய ஜோதீனாம்நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம்பவ தவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”
-என்ற வகையிலான அபிஜித் சித்சக்தித் துதிகளை, தினமும் பகல் 12 மணிக்கு அபிஜித் முகூர்த்த நேரத்திலும், மேல் விதானத்தில் நட்சத்திர/ராசி மண்டலம் உள்ள ஆலயங்களிலும் பூஜித்து ஓதியும், 27 நட்சத்திர தேவ மூர்த்திகளும் அபிஜித் மண்டல சக்திக்குள் ஆவாஹனமாகும் பாவனையுடன் வழிபடுதலும் மிகவும் அரியதான அபிஜித் மூர்த்த நேரப் பூஜையாகும். அபிஜித் பீஜாட்சர வாக்கியமாக, எந்த வேதத்தின் 28வது வாக்கியத்தையும் அபிஜித் அனுவாகமாக அனுசரித்து ஓதுவோரும் உண்டு. இவ்வாறு அபிஜித் என்பதற்கு வானியல் வேதப் பூர்வமான சுதபுத விளக்கங்கள் நிறையவே உண்டு.
*ஆண்டாளின் திருப்பாவையும் அபிஜித் நட்சத்திரம் உள்ளிட்ட 28 நட்சத்திரத்தில் பிறந்தோர்க்குமான, அகில உலக மக்கள் சமுதாயத்திற்கான நித்தியப் பிரார்த்தனைத் துதி., திருப்பாவையில் முதல் துதி நூன்முகப் பாசுரமாகவும், முப்பதாவது கடைத் துதி 'பலஸ்ருதிப் பாசுரமாகவும்' மலர்கின்றன. ஏனைய இருபத்தெட்டுப் பாசுரங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திர வாரணங்களுடன் சிறப்பதாம்.
சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை ஒவ்வொரு மணி நேரமும் ஒரு ஹோரை (மொத்தம் 24). முதல் ஹோரை அன்றைய கிழமையின் அதிபதி. நேரங்கள் தேர்ந்தெடுத்த ஊருக்கானவை.
ஒரு நாளைத் தொட்டால் அந்நாளின் முழு பஞ்சாங்கம் காணலாம்.
நவகிரகப் பெயர்ச்சி காலநேரங்கள்
⚝ சந்திரன்: இரண்டே கால் நாட்கள் (2.25 நாட்கள்) ⚝ சூரியன்: 1 மாதம் (சரியாக 30 நாட்கள்) ⚝ புதன்: 21 முதல் 27 நாட்கள் (approx) ⚝ சுக்கிரன்: 28 நாட்கள் (approx) ⚝ செவ்வாய்: 45 நாட்கள் (approx) ⚝ குரு (வியாழன்): 1 வருடம் ⚝ ராகு மற்றும் கேது: ஒன்றரை ஆண்டுகள் (1.5 ஆண்டுகள் / 18 மாதங்கள்) ⚝ சனி: இரண்டரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்)
தெய்வீக ஜாதகங்கள்
பிறந்த நேரத்தை ஒட்டி அமைகின்ற ஜாதகக் கட்டத்தின் படி, உடலில் கிரகப் பூர்வ அம்சங்கள் அமைவதற்குப் ‘‘பட்டக் கோளம்’’ என்று பெயர். அந்தந்த நாளில் வானில் அமையும் கிரக நிலைகளுக்கு ஏற்ப, உடலில் கோள அம்சங்கள் அமையும் பாங்கிற்குச் ‘‘பரிதக் கோளம்’’ என்று பெயர்.
தினமும் கிரகங்களின் அமைப்பை ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரைந்து அவற்றை நன்கு கவனித்துத் தியானித்து, கோளறு பதிகம், நவகிரகத் தோத்திரங்களை ஓதி வாருங்கள். வானியலில் உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் வரைந்து பூஜித்த கோள் வரைபடங்களிலும் சில தருணங்களில் தாமாகவே மாற்றங்கள் ஏற்படுவதான ஆனந்தமான அதிசய அனுபூதிகளும் இதனால் கிட்டும். இவ்வாறு பிற கோள்களில் நிலவும் நற்சக்திகளை, இல்லத்திற்கு, பூவுலகிற்குக் கொணர்தலும் அன்புக் கிரணங்களை நிலைப்படுத்தும். கண்ணாடிக் கோள ரீதியான தியான முறை (Meditation through crystal globe) மிகவும் சிறப்புடையதாகச் சித்தர்களால் அளிக்கப்படுகின்றது.
கால மார்த்தாண்ட சக்தி துதிகள்:-
- ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோஃ தக்ஷிணே பார்ஸ்வே..
- அஸ்மின் வர்த்தமானே, வ்யவஹாரிகே சாந்த்ரமானேன...
- பிரபவாதி சஷ்டி, சம்வத்ஸராணாம் மத்யே:
- ஸ்வேத வராஹ கல்பம் - மஹாதேவபட்டினம் ஸ்வேத வராஹ பெருமாள்!
- வைவஸ்வத மன்வந்திரம் - ஆயுஷ்மான் க்ருபாநிதி,
கலியுகாதி(5128) - வில்வ பேரளம் - பராபவம் - விபீஷண சரணாகதி, தக்ஷிணாயன, சரத்ருது
- துலா விஷு, தெய்வத் தமிழ் திருநாடு!, வருஷவ்ருஷ ஸம்வத்ஸரமுகி போற்றி!
- பிரம்மாவின் முதல் வருஷம், முதல் மாஸம், முதல் பக்ஷம், முதல் தினத்தில்,
பகலில் மூன்றாவது யாமம் மூன்றாவது முஹூர்த்தத்தில்... - கால கால சால தூர்வா கால தேவ மாளம்,
கால சாம்ய காலவேத காலகலசத் தாண்டவம்!
(͡°9͜ʖ5͡°) குசத்துளி!
சங்கல்ப மந்திரம்:-
இன்ன காலவகை இனிதே பண்டுவர
இன்னன் மதி தாரை ஏத்துவக்கும் கோளபரி
பன்னியே வந்துறும் பூ யோக கரணவதி
பொன்னன் அரியரனின் பூ நடன மாயிங்கே
அன்னம் ஆயிரமும் அருளார்ந்த ஆமோதம்
பின்னிய வினைச்சாரம் பிறண்டு போகிடவே
முன்னும் பின்னுவளி முக்திவழி பேணட்டும்
சின்னப் பூ அண்ணல் சீகண்ட அகத்தியமே
கன்னல் அமுதுவழி காலம் பெய்யோங்காள்!
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகலமின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்கொழுந்தே!
அருந்தமிழ் பஞ்சாங்கப் படனம்!
இன்ன கிழமை பெறாகும் ஈராகும் ஆயுளுமேசொன்னதோர் திதியுமோ செல்வப் பெருந் தகையாம்குன்னத்து யோகமே கழுபிணி நீக்குதலாம்சின்னத்துறை கரணஞ் சீர்செயல் சித்தியாம்வண்நட்சத் திரப் பேரோ வல்வினை போக்குதப்பா!
உலகப் பொதுவளவர சங்கல்பம்!
மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி, எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி, உடலை இரும்புக் கிணையாக்கிப்பொய்க்கும் கலியை நான் கொன்று, பூலோ கத்தார் கண்முன்னேமெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதி இஃதே!
- சித்தயோகி மஹாகவி பாரதியார்!
தினமும் ஓத வேண்டிய பஞ்சாங்கப் படனத் துதி!
தினமும் காலையில் பஞ்சாங்கத்தை படிப்பது, சிறப்பான காலபைரவ பூஜை முறையாகும். கீழ்க்கண்ட தொன்மையான பஞ்சாங்கத் துதியொன்று, தினமும் பஞ்சாங்கத்தைப் படித்து வருவதன் பலா பலன்களை திவ்யமாய் எடுத்துரைக்கின்றது.
"திதே: ஸ்ரீயப்வாப்நோதீ வாராத் ஆயுஷ்ய வர்தநம்நக்ஷத்ராத்ரதி பாபம் யோகாத் ரோக விநாஸநம் கர்ணாத்கார்யசித்திஷ்ச பஞ்சாங்க பலமுத்தமம்"
(தினமும் அந்தந்த நாளுக்கான கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஐந்தையும் சொல்லி வருவதன் பலாபலன்)
நிதந்தோறும் திதி சொல்ல நெடிய திரு கிட்டும்பதங்கிழமை பரிசொல்ல பரிந்தநல் ஆயுளாம்சுததாரை நாச்சொல்ல நனிபாவ மகலுவதாம்பதயோகம் கூறிடவே பொல்லாப் பிணி போகும்சதகரண சாதகமும் காரியநற் சித்தியாம்இதனைவப் பஞ்சங்கப் படன மென்றாமே!
(திரு= நீடித்த செல்வம், தாரா = நட்சத்திரம்)
ஒவ்வொரு கிழமை, திதி, நக்ஷத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்திற்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம், என்பது போல நமது முகத்தில் வார, திதி, நக்ஷத்திர, கரண, யோக தேவதைகள் குடி கொண்டுள்ளன. தலை (நெற்றி) – கிழமை, கண்கள் – திதி மூக்கு – நக்ஷத்திரம் வாய் – யோகம் செவி – கரணம்
சூரிய உதயம், ராகு காலம், எமகண்டம், குளிகை, ஹோரை, ஆகியவை தேர்ந்தெடுத்த ஊரைப் பொறுத்து மாறும். விரத நாட்கள் சூரிய உதய நேர அடிப்படையில் குறிக்கப்பட்டுள்ளன; முக்கிய நாட்களுக்கு உங்கள் குருவின் / ஆலயத்தின் பஞ்சாங்கத்தையும் பார்க்கவும் / அவரவர் குலவழக்கப்படி பின்பற்றவும்!
புண்ணிய தினங்கள்
ஐவர் திருநட்சத்திர தினங்கள்
| மாதம் தேதி | விவரம் |
|---|---|
| சித்திரை 28 | ஸ்ரீஅப்பர் சுவாமிகள் |
| வைகாசி 7 | ஸ்ரீசேக்கிழார் சுவாமிகள் |
| வைகாசி 19 | ஸ்ரீதிருஞானசம்பந்தர் |
| ஆனி 6 | ஸ்ரீமாணிக்கவாசகர் |
| ஆடி 6 | ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் |
பன்னிரு ஆழ்வார்கள் திருநட்சத்திர தினங்கள்
| மாதம் தேதி | விவரம் |
|---|---|
| சித்திரை 17 | ஸ்ரீமதுரகவியாழ்வார் |
| வைகாசி 16 | ஸ்ரீநம்மாழ்வார் |
| ஆனி 11 | ஸ்ரீபெரியாழ்வார் |
| ஆடி 29 | ஸ்ரீஆண்டாள் |
| ஐப்பசி 4 | ஸ்ரீபூதத்தாழ்வார் |
| ஐப்பசி 5 | ஸ்ரீபேயாழ்வார் |
| ஐப்பசி 30 | ஸ்ரீபொய்கையாழ்வார் |
| கார்த்திகை 8 | ஸ்ரீதிருமங்கையாழ்வார் |
| கார்த்திகை 9 | ஸ்ரீதிருப்பாணாழ்வார் |
| மார்கழி 21 | ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார் |
| தை 10 | ஸ்ரீதிருமழிசையாழ்வார் |
| மாசி 6 | ஸ்ரீகுலசேகராழ்வார் |
நவக்கிரக ஜெயந்தி தினங்கள்
| மாதம் தேதி | விவரம் |
|---|---|
| சித்திரை 14 | புதன் ஜெயந்தி |
| ஆவணி 19 | சனி ஜெயந்தி |
| ஆவணி 26 | அங்காரக ஜெயந்தி |
| புரட்டாசி 6 | குரு ஜெயந்தி |
| புரட்டாசி 18 | சுக்கிர ஜெயந்தி |
| கார்த்திகை 7 | சந்திர ஜெயந்தி |
| மாசி 1 | சூரிய ஜெயந்தி |
(ராகு – கேதுக்களுக்கு கிரக ரூபம் இல்லாமையாலும், சாயாக் கிரகங்களாவதாலும் ஜெயந்தி நாட்கள் கிடையாது).
தசாவதார ஜெயந்தி தினங்கள்
| மாதம் தேதி | விவரம் |
|---|---|
| சித்திரை 2 | ஸ்ரீமத்ஸ்யர் |
| சித்திரை 6 | ஸ்ரீபலராமர் |
| சித்திரை 17 | ஸ்ரீநரசிம்மர் |
| ஆனி 27 | ஸ்ரீகூர்மர் |
| ஆவணி 26 | ஸ்ரீகல்கி |
| ஆவணி 18 | ஸ்ரீகண்ணன் |
| புரட்டாசி 6 | ஸ்ரீவாமனர் |
| மார்கழி 10 | ஸ்ரீபரசுராமர் |
இவ்வருடம் சைத்ர பகுள பஞ்சமி இல்லை – ஸ்ரீவராகர்
இவ்வருடம் சைத்ர சுத்த நவமி இல்லை – ஸ்ரீராமர்
அறுபத்து மூன்று நாயன்மார்கள், மாணிக்கவாசகர் மற்றும் சந்தானக் குரவர்கள் முக்தி பெற்ற நாட்கள்
| மாதம் | தேதி · பெயர் |
|---|---|
| சித்திரை | 4 வடுகநம்பிகள்5 சிறுத்தொண்டர் நாயனார்7 மங்கையற்கரசியார்8 ஸ்ரீஆதிசங்கரர்9 விரன்மீண்ட நாயனார்16 உமாபதி சிவாச்சாரியார்17 இசைஞானியார்18 திருக்குறிப்புத் தொண்ட நாயனார்28 திருநாவுக்கரசர் ஜெயந்தி |
| வைகாசி | 7 பூமிநந்தி நாயனார், சேக்கிழார் நாயனார்8 சோமாசிமாற நாயனார்17 காஞ்சி மஹா பெரியவாள் ஜெயந்தி19 திருஞான சம்மந்த நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார்29 கழற்சிங்க நாயனார் |
| ஆனி | 6 மாணிக்கவாசக சுவாமிகள்7 அமர்நீதி நாயனார்24 ஏயர்கோன் கலிக்காம நாயனார் |
| ஆடி | 6 சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாநாயனார் (கழற்றறிவார் நாயனார்)9 கலிநீதி நாயனார் (கலிய நாயனார்), கோட்புலி நாயனார்12 காரி நாயனார்22 மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார்24 கூற்றுவ நாயனார்32 பெருமிழலைக் குறும்ப நாயனார் |
| ஆவணி | 6 குங்கிலியக் கலிய நாயனார்22 செறுத்துணை நாயனார்23 புகழ்த்துணை நாயனார், அதிபக்தர் நாயனார்24 இளையான்குடிமாற நாயனார்26 மறைஞான சம்பந்த சிவாச்சாரியார்31 குலச்சிறை நாயனார் |
| புரட்டாசி | 4 ஏனாதி நாயனார்7 நரசிங்க முனையரைய நாயனார்11 உருத்திர பசுபதி நாயனார்14 திருநாளைப்போவார் நாயனார்21 அருணந்தி சிவாச்சாரியார் |
| ஐப்பசி | 9 திருமூலர் நாயனார்10 நின்றசீர் நெடுமாற நாயனார், குலச்சிறை நாயனார்11 இடங்கழி நாயனார்15 சக்தி நாயனார்22 மெய்கண்ட சிவாச்சாரியார்24 பூசலார் நாயனார்27 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |
| கார்த்திகை | 8 கனம்புல்ல நாயனார்16 மெய்ப்பொருள் நாயனார்17 ஆனாய நாயனார்24 மூர்க்க நாயனார்25 சிறப்புலி நாயனார் |
| மார்கழி | 4 வாயிலா நாயனார்9 சடைய நாயனார்15 இயற்பகை நாயனார்18 மானக்கஞ்சார நாயனார்23 சாக்கிய நாயனார் |
| தை | 6 கண்ணப்ப நாயனார், அரிவாட்டாய நாயனார்12 சண்டேகேஸ்வர நாயனார்16 திருநீலகண்ட நாயனார், தாயுமான சுவாமிகள்25 அப்பூதியடிகள் நாயனார்28 கலிக்காம நாயனார் |
| மாசி | 10 திருவள்ளுவ நாயனார்11 எறிபக்தர் நாயனார்19 காரி நாயனார்20 காஞ்சி ஜெகத்குரு ஸ்ரீவிஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி23 கோட் செங்கட் சோழ நாயனார் |
| பங்குனி | 4 முனையாடுவார் நாயனார்11 காரைக்காலம்மையார்21 தண்டியடிக நாயனார்28 சிவநேச நாயனார்30 கணநாத நாயனார் |
மத்வாச்சாரியார் புண்ய தீர்த்த தினங்கள்
| மாதம் | தேதி · பெயர் |
|---|---|
| சித்திரை | 2 சத்திய பிரியர்7 வித்யாதிராஜர்9 ஸ்ரீஇராமச்சந்திரர் |
| ஆனி | 2 சத்திய சம்பூரணர்18 ரகுவீரர்30 சத்தியாபி நவதி |
| ஆடி | 18 ஜயர் |
| ஆவணி | 2 சத்திய வரதர்12 ஸ்ரீராகவேந்திரர்22 சத்திய தர்மர் |
| புரட்டாசி | 23 ஸ்ரீமாதவர் |
| கார்த்திகை | 4 வேதநிதி11 பத்மநாப வித்யாநிதி21 பத்மநாப தீர்த்தமர் |
| மார்கழி | 4 சத்திய நிதி5 சத்திய நாதர்9 ரகுநாதர்13 அக்ஷேப்யர்15 நரஹரி22 வித்யாதீசர் |
| மாசி | 3 ஸ்ரீமத் அனந்தர்29 சத்திய விரதர் |
| பங்குனி | 9 சத்திய போக்தர்12 வியாஸராயர்24 வேதவியாஸர் |
நடராஜர் அபிஷேக தினங்கள்
| மாதம் தேதி | விவரம் |
|---|---|
| சித்திரை 26 | திருவோணம் |
| ஆனி 8 | உத்திரம் |
| ஆவணி 9 | சுக்ல சதுர்த்தசி |
| புரட்டாசி 8 | சுக்ல சதுர்த்தசி |
| மார்கழி 8 | திருவாதிரை |
| மாசி 7 | சுக்ல சதுர்த்தசி |
ஷண்ணாவதி புண்ணிய காலங்கள் (96 நாட்கள்)
| வ.எண் | ஷண்ணாவதி புண்ணிய காலம் | நாட்களின் எண்ணிக்கை |
|---|---|---|
| 1 | அமாவாசைவருடத்தின் 12 அமாவாசைகள் | 12 நாட்கள் |
| 2 | மாதப்பிறப்பு / சங்கரமணம்12 தமிழ் மாதப் பிறப்புகள் | 12 நாட்கள் |
| 3 | மன்வாதி நாட்கள்மன்வந்தர புண்ணிய காலங்கள் | 14 நாட்கள் |
| 4 | யுகாதி நாட்கள்யுகங்கள் தொடங்கிய புண்ணிய காலங்கள் – கிருத, திரேதா, துவாபர, கலி | 4 நாட்கள் |
| 5 | வியதீபாதம்வியதீபாத யோகம் வரும் நாட்கள் | 13 / 12 நாட்கள் |
| 6 | வைத்ருதிவைத்ருதி யோகம் வரும் நாட்கள் | 13 / 12 நாட்கள் |
| 7 | மஹாளய பக்ஷம்புரட்டாசி பித்ரு பக்ஷ புண்ணிய நாட்கள் | 16 நாட்கள் |
| 8 | அஷ்டகாமார்கழி, தை, மாசி, பங்குனி மாத தேய் பிறை அஷ்டமி திதிகள் | 4 நாட்கள் |
| 9 | அன்வஷ்டகாமார்கழி, தை, மாசி, பங்குனி மாத தேய் பிறை நவமி திதிகள் | 4 நாட்கள் |
| 10 | திஸ்ரோஷ்டகா / பூர்வேத்யுமார்கழி, தை, மாசி, பங்குனி மாத தேய் பிறை சப்தமி திதிகள் | 4 நாட்கள் |
| மொத்த நாட்கள் | 96 நாட்கள் |
சில அபூர்வ தெய்வ விரதங்கள்
| வ.எண் | விரதம் |
|---|---|
| 1 | சாந்தாராயன விரதம்சந்திரனின் பிறை வளர்வதற்கும் தேய்வதற்கும் ஏற்ப, சாப்பாட்டு கவளங்களின் (உருண்டை) எண்ணிக்கையைக் கூட்டி மற்றும் குறைத்து உண்ணும் அபூர்வ முறை (சந்திராம்ச விரதம் என்றும் அழைக்கப்படும்). |
| 2 | அமுக்தாபரண விரதம்புரட்டாசி வளர்பிறை சப்தமி. |
| 3 | ஜேஷ்டா விரதம்புரட்டாசி வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை (ஜேஷ்டா தேவி) நோக்கி வறுமை நீங்கக் கடைப்பிடிக்கப்படும் விரதம். |
| 4 | கபில சஷ்டி விரதம்புரட்டாசி தேய்பிறை சஷ்டியில் சூர்ய பகவானையும், கபிலை (தாமிர நிற) பசுவையும் வழிபடும் மிக அபூர்வமான விரதம். |
| 5 | தூர்வாஷ்டமி விரதம்புரட்டாசி வளர்பிறை அஷ்டமியில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி, குடும்ப நலனுக்காக இருக்கப்படும் நோன்பு. |
| 6 | அனந்த விரதம் / அனந்த பத்மநாப விரதம்21 காய்கறிகள் கலந்த உணவு தானம்! |
| 7 | லலிதா சஷ்டி விரதம்அம்பாளின் லலிதாம்பிகை வடிவத்தை நோக்கிச் சகல மங்களங்களும் பெறக் கடைப்பிடிக்கப்படும் விரதம். |
| 8 | பாசுபத விரதம்தைப்பூச நன்னாளில் சிவபெருமானின் அருள் பெறக் கடைப்பிடிக்கப்படும் எட்டு சிவ விரதங்களில் ஒன்று. |
| 9 | சப்தரிஷி பிரதோஷம் (அபயப் பிரதோஷம்)ஐப்பசி, கார்த்திகை, மார்கழி போன்ற பனிக்காலத் திரயோதசி திதிகளில், வானில் தோன்றும் சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து சிவனை வழிபடும் அபூர்வ பிரதோஷ விரதம். |
காரகத்துவங்களின் காரணங்கள்!
நவக்கிரக புஷ்பம், சமித்து, வாகனம், சுவை, உலோகம்
| கிரகம் | புஷ்பம் | சமித்து | வாகனம் | சுவை | உலோகம் |
|---|---|---|---|---|---|
| சூரியன் | செந்தாமரை | எருக்கு | மயில், தேர் | காரம் | தாமிரம் |
| சந்திரன் | வெள்ளை அல்லி | முருக்கு | முத்து விமானம் | தித்திப்பு | ஈயம் |
| செவ்வாய் | செண்பகம் | கருங்காலி | அன்னம் | துவர்ப்பு | செம்பு |
| புதன் | வெண்காந்தள் | நாயுறுவி | குதிரை | உப்பு | பித்தளை |
| குரு | முல்லை | அரசு | யானை | தித்திப்பு | பொன் |
| சுக்கிரன் | வெண்தாமரை | அத்தி | கருடன் | தித்திப்பு | வெள்ளி |
| சனி | கருங்குவளை | வன்னி | காகம் | கைப்பு | இரும்பு |
| ராகு | மந்தாரை | அறுகு | ஆடு | புளிப்பு | கருங்கல் |
| கேது | செவ்வல்லி | தர்பை | சிங்கம் | புளிப்பு | துருக்கல் |
நவக்கிரக தெய்வங்கள் – காலம், தேவதை, வஸ்திரம், க்ஷேத்ரம்
| கிரகம் | காலம் | தேவதை | வஸ்திரம் | க்ஷேத்ரம் |
|---|---|---|---|---|
| சூரியன் | 1 மாதம் | சிவன் | சிகப்பு | ஆடுதுறை |
| சந்திரன் | 2¼ நாள் | பார்வதி | வெள்ளை | திருப்பதி |
| செவ்வாய் | 1½ மாதம் | முருகன் | சிகப்பு | வைதீஸ்வரன் கோயில் |
| புதன் | 1 மாதம் | விஷ்ணு | பச்சை பட்டு | மதுரை |
| குரு | 1 வருஷம் | பிரம்மா | மஞ்சள் | செந்தில், ஆலங்குடி |
| சுக்கிரன் | 1 மாதம் | லக்ஷ்மி | வெண் பட்டு | ஸ்ரீரங்கம் |
| சனி | 2½ வருஷம் | எமன் | கருப்பு பட்டு | திருநள்ளாறு |
| ராகு | 1½ வருஷம் | பத்ரகாளி | கருப்பு வஸ்திரம் | திருநாகேஸ்வரம் |
| கேது | 1½ வருஷம் | இந்திரன் | பலவர்ண வஸ்திரம் | காளாஸ்திரி |
சதுர்பார்ய தேவதா
(ஒவ்வொரு கிரக தசைக்குமுரிய நான்குவித தேவதா மூர்த்திகளை அறிந்து வழிபடுங்கள்)
| கிரக மகா திசை | போதக மூர்த்தி | தேவக மூர்த்தி | பாசக மூர்த்தி | பராச மூர்த்தி |
|---|---|---|---|---|
| சூரியன் | செவ்வாய் | சுக்கிரன் | சனி | குரு |
| சந்திரன் | செவ்வாய் | சூரியன் | சுக்கிரன் | சனி |
| செவ்வாய் | சந்திரன் | புதன் | சூரியன் | சனி |
| புதன் | குரு | செவ்வாய் | சந்திரன் | சுக்கிரன் |
| குரு | செவ்வாய் | சூரியன் | சனி | சந்திரன் |
| சுக்கிரன் | குரு | சனி | புதன் | சூரியன் |
| சனி | சந்திரன் | செவ்வாய் | சுக்கிரன் | குரு |
தினந்தோறும் தன்னுடைய தசா புக்திக்குரிய போதக மூர்த்திகளை அறிந்து வழிபடுதல் சிறப்புடையதாகும். மகாதசை போதக மூர்த்தியைப் பற்றி நீங்கள் அறிவதற்கான அட்டவணையை நாம் இங்கு அளிக்கின்றோம். - அகஸ்திய விஜயம்!
முக்குண வேளை – பகல்
| மணி | ஞாயிறு, புதன், சனி | திங்கள், வியாழன் | செவ்வாய், வெள்ளி |
|---|---|---|---|
| 6 – 7½ | தாமஸம் | சாத்வீகம் | ராஜஸம் |
| 7½ – 9 | சாத்வீகம் | ராஜஸம் | தாமஸம் |
| 9 – 10½ | ராஜஸம் | தாமஸம் | சாத்வீகம் |
| 10½ – 12 | தாமஸம் | சாத்வீகம் | ராஜஸம் |
| 12 – 1½ | சாத்வீகம் | ராஜஸம் | தாமஸம் |
| 1½ – 3 | ராஜஸம் | தாமஸம் | சாத்வீகம் |
| 3 – 4½ | தாமஸம் | சாத்வீகம் | ராஜஸம் |
| 4½ – 6 | சாத்வீகம் | ராஜஸம் | தாமஸம் |
முக்குண வேளை – இரவு
| மணி | ஞாயிறு, புதன், சனி | திங்கள், வியாழன் | செவ்வாய், வெள்ளி |
|---|---|---|---|
| 6 – 7½ | ராஜஸம் | தாமஸம் | சாத்வீகம் |
| 7½ – 9 | தாமஸம் | சாத்வீகம் | ராஜஸம் |
| 9 – 10½ | சாத்வீகம் | ராஜஸம் | தாமஸம் |
| 10½ – 12 | ராஜஸம் | தாமஸம் | சாத்வீகம் |
| 12 – 1½ | தாமஸம் | சாத்வீகம் | ராஜஸம் |
| 1½ – 3 | சாத்வீகம் | ராஜஸம் | தாமஸம் |
| 3 – 4½ | ராஜஸம் | தாமஸம் | சாத்வீகம் |
| 4½ – 6 | தாமஸம் | சாத்வீகம் | ராஜஸம் |
முக்குணவேளை பற்றி வாத்தியார் அருளிய விளக்கங்களை அகஸ்திய விஜய மாத இதழில் காண்க!
நான்கு யுகங்களின் வருஷங்கள்
| யுகம் | வருடங்கள் |
|---|---|
| கிருத யுகம் | 17,28,000 வருடங்கள் |
| திரேதா யுகம் | 12,96,000 வருடங்கள் |
| துவாபர யுகம் | 8,64,000 வருடங்கள் |
| கலி யுகம் | 4,32,000 வருடங்கள் |
ஸ்ரீவாஸ்து புருஷனின் கார்ய நேரங்கள்
நித்திரை விடும் நாள் (காலை)
| நித்திரை விடும் நாள் (காலை) | தந்தாவன (பல்துலக்குதல்) நேரம் | ஸ்நான (நீராடுதல்) நேரம் | பூஜை நேரம் | போஜன (அன்னம் அருந்துதல்) நேரம் | தாம்பூல நேரம் |
|---|---|---|---|---|---|
| சித்திரை 10 | 7.56 – 8.14 | 8.14 – 8.32 | 8.32 – 8.50 | 8.50 – 9.08 | 9.08 – 9.26 |
| வைகாசி 21 | 12.23 – 12.41 pm | 12.41 – 12.59 | 12.59 – 1.17 | 1.17 – 1.35 | 1.35 – 1.53 |
| ஆடி 11 | 6.44 – 7.02 | 7.02 – 7.20 | 7.20 – 7.38 | 7.38 – 7.56 | 7.56 – 8.14 |
| ஆவணி 6 (பகல்) | 2.25 – 2.43 | 2.43 – 3.01 | 3.01 – 3.19 | 3.19 – 3.37 | 3.37 – 3.55 |
| ஐப்பசி 11 | 6.53 – 7.11 | 7.11 – 7.29 | 7.29 – 7.47 | 7.47 – 8.05 | 8.05 – 8.23 |
| கார்த்திகை 8 | 10.15 – 10.33 | 10.33 – 10.51 | 10.51 – 11.09 | 11.09 – 11.27 | 11.27 – 11.45 |
| தை 12 | 9.52 – 10.10 | 10.10 – 10.28 | 10.28 – 10.46 | 10.46 – 11.04 | 11.04 – 11.22 |
| மாசி 23 | 9.38 – 9.56 | 9.56 – 10.14 | 10.14 – 10.32 | 10.32 – 10.50 | 10.50 – 11.08 |
- இது அனைத்துத் தமிழ் வருடங்களுக்கும் பொதுவானதாகும். அனைத்து வருடங்களிலும் இந்நாட்களிலேயே ஸ்ரீவாஸ்து புருஷன் விழித்திருக்கிறார்.
- இது 1995வருட சென்னை சூரியோதய நேரத்துக்கு உட்பட்டது. அந்தந்தப் பகுதிகளின் சூரியோதய நேரத்திற்கு ஏற்றபடி இவை சற்றே மாறும். (chart timings as presented in sri agasthia vijayam magazine on tat specific month edition!)
- ஸ்ரீவாஸ்து புருஷன் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் சயனத்திலிருக்கிறார். இம்மாதங்களில் அவர் நித்திரையிலிருப்பதால் இம் மாதங்களில் கிரஹாம்பரம் கூடாது.
ஸ்ரீவாஸ்து பூஜை என்பது புதுக் கட்டிடம், புது வீட்டிற்கான அஸ்திவாரம் போடும்போது செய்ய வேண்டியது மட்டுமல்ல. ஏற்கனவே நாம் வாழ்கின்ற இல்லம், கடை, வியாபாரத் தலம், பணி புரிகின்ற அலுவலகம், பயிர் நிலம் போன்ற பிருத்வி அம்சங்கள் நிறைந்த அனைத்திலுமே அனைவராலும் கடைபிடிக்க வேண்டிய நித்திய பூஜையாகும்.
மொத்தத்தில் வருடத்திற்கு எட்டு நாட்களே ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரையிலிருந்து விழிப்பதால் இந்த 8X90 = 720 = 12 மணி நேரத்தை வீணாக்காதீர்கள். குறிப்பாக ஸ்ரீவாஸ்து புருஷனின் போஜன, தாம்பூல நேரமான 8X36=288= 4 மணி 48 நிமிடங்கள் வையத்தில் மிகமிகப் புனிதமான நேரமாகக் கிடைத்தற்கரிய நேரம். ஏதோ புது வீட்டிற்கு அஸ்திவாரம் போடுபவர்களுக்கே இந்தச் ஜோதிட நேரம் என்று எண்ணாது அனைவரும் இந்த நேரங்களை அறிந்து கொண்டு நன்கு பயன்பெற வேண்டும். இறைவன் படைத்துள்ள இந்த ஸ்ரீவாஸ்து புருஷ விழிப்பு நிலை நேரங்கள் அனைத்து மனிதர்களுக்கும் உரித்தானவை!ஸ்ரீவாஸ்து பூஜைக்குரிய நாட்கள்
ஒரு வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வாஸ்து தினங்களாக அமைகின்றன.
- சித்திரை மாதம் – 10 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- வைகாசி மாதம் – 21 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 6 மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- ஆடி மாதம் – 11 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- ஆவணி மாதம் – 6 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 8 மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- ஐப்பசி மாதம் – 11 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- கார்த்திகை மாதம் – 8 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 4 மணி நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- தை மாதம் – 12 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 3 மணி 12 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
- மாசி மாதம் – 23 ஆம் தேதி சூரிய உதயத்தில் இருந்து 3 மணி 12 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்கள்
மேற்கண்ட எட்டு நாட்களிலும் அந்தந்த நாளுக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள சூரிய உதயத்தில் இருந்து குறித்த நேரத்திற்கு மேலாக 90 நிமிடங்களுக்குள் தந்த சுத்தி, புனித நீராடல், பூஜை, போஜனம் (அன்னம் ஏற்றல்) தாம்பூலம் ஏற்றல் ஆகிய ஐந்து புனிதக் காரியங்களை ஸ்ரீவாஸ்து பகவான் ஏற்கிறார். ஒவ்வொரு காரியத்திற்கும் 18 நிமிடங்கள் என ஐந்து காரியங்களுக்கும் மொத்தம் 90 நிமிடங்கள் அமைகின்றன.
வாஸ்து பூஜையை வாஸ்துவின் ஆரம்ப நேரத்தில் இருந்து துவங்குதல் சிறப்பானது. இவற்றில் மிகவும் புனிதமானதாக கிரகப் பிரவேசம், புது வீட்டில் காலடி வைத்தல் போன்ற நற்காரியங்களுக்கு ஸ்ரீவாஸ்து பகவான் அன்னம் ஏற்றல் மற்றும் தாம்பூலம் தரிக்கும் நேரம் (கடைசி 36 நிமிட நேரம்) மிகவும் சிறப்பானதாகும்.
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்
| எண் | ஆங்கில எழுத்துக்கள் |
|---|---|
| 1 | A, I, J, Q, Y |
| 2 | B, K, R |
| 3 | C, G, L, S |
| 4 | D, M, T |
| 5 | E, H, N, X |
| 6 | U, V, W |
| 7 | O, Z |
| 8 | F, P |
நட்பு, பகை, சம எண்களின் அட்டவணை
| கிரக எண் | நட்பு எண் | சம எண் | பகை எண் |
|---|---|---|---|
| சூரியன் – 1 | 1, 2, 3, 9 | 5 | 6, 8, 4, 7 |
| சந்திரன் – 2 | 2, 1, 5 | 3, 6, 8, 9 | 4, 7 |
| குரு – 3 | 3, 1, 2, 9 | 8 | 5, 6, 4, 7 |
| ராகு – 4 | 4, 6, 7, 8, 5 | — | 1, 2, 3, 9 |
| புதன் – 5 | 5, 1, 6, 4, 7 | 3, 8, 9 | 2 |
| சுக்கிரன் – 6 | 6, 5, 8, 4, 7 | 9 | 1, 2, 3 |
| கேது – 7 | 7, 8, 6, 4 | 3, 5 | 1, 2, 9 |
| சனி – 8 | 8, 5, 6, 4, 7 | 3 | 1, 2, 9 |
| செவ்வாய் – 9 | 9, 1, 2, 3 | 6, 8 | 4, 5, 7 |
நட்சத்திர தேவதைகள்
திதி கணபதி
| எண் | திதி · கணபதி |
|---|
திதி நித்யா தேவிகள்
| எண் | திதி · நித்யா தேவி |
|---|
பொருத்தம் இல்லை.
கூடா நாள் · அமிர்த · சித்த · மரண யோகங்கள்
கிழமையும் அன்றைய நட்சத்திரமும் சேர்ந்து வரும் யோகம். சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை கணக்கு; நட்சத்திரம் மாறும் நேரத்தில் யோகமும் மாறும்.
ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்
| ராசி | நட்சத்திரங்களும் பாதங்களும் |
|---|---|
| ௧ (1)மேஷம் | அசுவினி (4 பாதங்கள்) பரணி (4 பாதங்கள்) கார்த்திகை (1-ஆம் பாதம்) |
| ௨ (2)ரிஷபம் | கார்த்திகை (2, 3, 4-ஆம் பாதங்கள்) ரோகிணி (4 பாதங்கள்) மிருகசீரிஷம் (1, 2-ஆம் பாதங்கள்) |
| ௩ (3)மிதுனம் | மிருகசீரிஷம் (3, 4-ஆம் பாதங்கள்) திருவாதிரை (4 பாதங்கள்) புனர்பூசம் (1, 2, 3-ஆம் பாதங்கள்) |
| ௪ (4)கடகம் | புனர்பூசம் (4-ஆம் பாதம்) பூசம் (4 பாதங்கள்) ஆயில்யம் (4 பாதங்கள்) |
| ௫ (5)சிம்மம் | மகம் (4 பாதங்கள்) பூரம் (4 பாதங்கள்) உத்திரம் (1-ஆம் பாதம்) |
| ௬ (6)கன்னி | உத்திரம் (2, 3, 4-ஆம் பாதங்கள்) அஸ்தம் (4 பாதங்கள்) சித்திரை (1, 2-ஆம் பாதங்கள்) |
| ௭ (7)துலாம் | சித்திரை (3, 4-ஆம் பாதங்கள்) சுவாதி (4 பாதங்கள்) விசாகம் (1, 2, 3-ஆம் பாதங்கள்) |
| ௮ (8)விருச்சிகம் | விசாகம் (4-ஆம் பாதம்) அனுஷம் (4 பாதங்கள்) கேட்டை (4 பாதங்கள்) |
| ௯ (9)தனுசு | மூலம் (4 பாதங்கள்) பூராடம் (4 பாதங்கள்) உத்திராடம் (1-ஆம் பாதம்) |
| ௰ (10)மகரம் | உத்திராடம் (2, 3, 4-ஆம் பாதங்கள்) திருவோணம் (4 பாதங்கள்) அவிட்டம் (1, 2-ஆம் பாதங்கள்) |
| ௰௧ (11)கும்பம் | அவிட்டம் (3, 4-ஆம் பாதங்கள்) சதயம் (4 பாதங்கள்) பூரட்டாதி (1, 2, 3-ஆம் பாதங்கள்) |
| ௰௨ (12)மீனம் | பூரட்டாதி (4-ஆம் பாதம்) உத்திரட்டாதி (4 பாதங்கள்) ரேவதி (4 பாதங்கள்) |
சூன்ய திதிகள்
ஸ்ரீ குண்டலினி மஹரிஷி அருளிய சூன்ய திதி, சவுன நாட்களின் விளக்கங்கள்
| ராசிகள் | சூன்ய திதிகள் |
|---|---|
| மேஷம் | சஷ்டி |
| ரிஷபம் | சதுர்த்தி, திரயோதசி |
| மிதுனம் | பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி |
| கடகம் | சப்தமி |
| சிம்மம் | த்ரிதியை, சஷ்டி, நவமி, திரயோதசி |
| கன்னி | பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி |
| துலாம் | பிரதமை, துவாதசி |
| விருச்சிகம் | தசமி |
| தனுசு | த்விதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி |
| மகரம் | பிரதமை, த்ரிதியை, துவாதசி |
| கும்பம் | சதுர்த்தி |
| மீனம் | துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி |
அமாவாசையும், பௌர்ணமியும் பரிபூரண நாட்களாதலின் எல்லா சுபச் செயல்களுக்கும் ஏற்றவை.
குறித்த ராசிக்காரர்கள் அவரவர்க்குரித்தான சூன்ய திதிகளில் அனைத்து நற்காரியங்களையும், நகம், சவரம், முடிவெட்டுதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூன்ய திதிகளில் விஷ்ணு சகஸ்ர நாமம், கால பைரவர் துதி, அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை கூட்டாக பாராயணம் செய்தலால் சூன்ய திதிகளின் தீய விளைவுகளைத் தணிக்கலாம்.
தலைமுடி வெட்டுதல், முக சவரம், நகம் வெட்டக் கூடாத நட்சத்திர நாட்கள்
ஸ்ரீகுண்டலினி மஹரிஷி அருளிய விதி முறைகளை முறையாகக் கடைபிடித்தால் தீய சக்திகளின் தாக்குதல்களில் இருந்து எளிதாக நம்மை தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், இறைவனுக்குக் காணிக்கையாகவோ, பிரார்த்தனையாகவோ முடியைச் செலுத்துவதற்கு எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது.
| நட்சத்திரம் | புராண நிகழ்சிகள் · விளைவுகள் |
|---|---|
| பரணி | கிருஷ்ணன் - ஸ்யமந்தக மணிமணி திருடியதாக வீண் பழி |
| கிருத்திகை | வீரபாகு தேவர்-கிரௌஞ்சமலைமாயையால் மயக்கம் |
| திருவாதிரை | சகுனிதுரியோதனிடம் சிறைப்படல் |
| ஆயில்யம் | இந்திரன் - அகல்யையோனியுடல் சாபம் |
| மகம் | எமதர்மன் - மார்க்கண்டேயன்பதவி பறிப்பு |
| பூரம் | தசரதன் - இரவு வேட்டை சப்தவேதி-ரிஷிகுமாரன்ரிஷி சாபம் |
| விசாகம் | சூரபத்மன் - முருகன் கோபம்தலைவன், உறவினர் மேலதிகாரி கோபம் |
| கேட்டை | கர்ணன் - இந்திரன் கவச குண்டலம்இழப்பு |
| மூலம் | கம்சன் - கிருஷ்ணன்அழிவுகாலம் |
| பூராடம் | சிசுபாலன் - கண்ணன்அழிவுகாலம் |
| பூரட்டாதி | தருமன் - சூதாட்டம்நாடு, சொத்து இழப்பு |
மேலும் இத்தகைய நட்சத்திர நாட்களில் மட்டுமல்லாது அவரவர் ராசிக்குரித்தான சூன்ய திதிகள், செவ்வாய், வெள்ளி முதலிய நாட்களில் மழித்தல், நகம் வெட்டுதல் கூடாது.
தகாத நாட்களில் சவரம் செய்தமையால் பல புராண புருஷர்கள், இதிகாச தேவமூர்த்திகள், பாத்திரங்கள் மேற்கண்டவாறு பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
*தலைமுடி (மட்டும்) வெட்டக் கூடாத மாதங்கள்: ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி.